சிகரட் விலைகள் அதிகரிப்பு

🕔 January 1, 2016

cigarette - 086சிகரட் வகைகள் அனைத்தினதும் விலைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிலோன் டொபாக்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிணங்க, பிறிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 22 ரூபாவாகும்.

கோல்ட்லீப் (Gold Leaf) ஒன்றின் விலை 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 35 ரூபாவாகும்.

கெப்டன் (Capstan) ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  புதிய விலை 11 ரூபாவாகும்.

அத்துடன் Benson & Hedges (B&H) 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 37 ரூபா.

Dunhill SWITCH 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 40 ரூபா. Dunhill Lights 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதன் புதிய விலை 37 ரூபாவாகும்.

Comments