அமைச்சர் றிசாத் – ஆனந்தசாகர தேரர்; மோதல் இன்று

🕔 December 28, 2015

Rishad - 976
மைச்சர் றிசாத் பதியுத்தீன் –  பஹியங்கல ஆனந்தசாகர தேரர், இன்று இன்று திங்கட்கிழமை ஹிரு தொலைக்காட்சியின் ‘சலகுன’ எனும் நேரடி விவாத நிகழ்சியில் மோதிக் கொள்கின்றனர்.

வில்பத்து பகுதியில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, மேலும் பல சட்ட விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாக, பஹியங்கல ஆனந்தசாகர தேரர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர் றிசாத் பதியுத்தீன், இது தொடர்பில் ஆனந்தசாகர தேரரிடம் சவாலினையும் விடுத்திருந்தார்.

இதனையடுத்து மேற்படி இருவரும், நேரடி தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்குபற்ற இணக்கம் வெளியிட்டதோடு,  ஹிரு தொலைகாட்சியில் அந்த  விவாதத்தை நடத்துவற்கும் விருப்பம் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று திங்கட்கிழமை, ஹிரு தொலைகாட்சியில் ‘சலக்குன’ விவாத நிகழ்ச்சி, குறித்த விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

காடழிப்பு  , சட்டவிரோத குடியேற்றம் , மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு சட்டவிரோத செயலற்பாடுகளில் அமைச்சர் றிசாத் ஈடுபடுவதாக பஹியங்கல ஆனந்தசாகர தேரர் குற்றம்சாட்டியிருந்தார்.

இவற்றை மறுத்திருந்த அமைச்சர், தன்மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்