கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள்: அம்பாறையில் நடைபெற்ற மூன்று அமர்வுகள்

🕔 March 28, 2022

– றிசாத் ஏ காதர் –

ற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் ((WILL) திட்டத்தின் கீழ், மூன்று அமர்வுகளைக் கொண்ட முழுநாள் நிகழ்வு – நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை – மொண்டி ஹொட்டலில் நடைபெற்றது.

சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையுடன்அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் நிறுவனத்தினால் (AWF) மேற்படி கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் ((WILL) திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி நிறுவனங்களின் பெண் உறுப்பினர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சிகளையும் உள்ளுராட்சி முறைமை தொடர்பில் அறிவூட்டும் பயிலரங்குகளையும், கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் ((WILL) திட்டம் நடத்தி வருகின்றது.

நேற்றைய அமர்வுகளில் பிரதேச சபைகளில் உறுப்பினர்களாகவுள்ள பெண்கள், ஊடகவியலாளர்கள், துறைசார் தலைவர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர்.

நிகழ்வின் இறுதியும் மூன்றாவதுமான அமர்வில், பெண் உறுப்பினர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான வட்டமேசை கலந்துரையாடல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கானஆலோசகர் நளினி ரட்ணராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாதிப்புற்ற பெண்கள் நிறுவனத்தின் இணைப்பாளர் வாணி சைமன், சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களைவலுப்படுத்தல் திட்ட இணைப்பாளர் கமலவாணி சுதாகரன் ஆகியோருடன் மனித உரிமை ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சட்டத்தரணி ஏ.சி.ஏ.அஸீஸ் மற்றும் அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்