ஈச்சம்பழம் கிலோ ஒன்றுக்கு 200 ரூபா பண்ட வரி; நிதியமைச்சு அறிவிப்பு: முஸ்லிம் எம்.பிகள் தீர்வு பெற்றுக் கொடுத்ததாக வெளியான கதைகளுக்கு என்னானது?

🕔 March 17, 2022

றக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட சில பழங்கள் மற்றம் பொருட்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பு அடுத்த 06 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் ஈச்சம்பழம், தயிர், ஆப்பிள், திராட்சை மற்றம் சீஸ் ஆகியவற்றின் விலைகள் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈச்சம் பழம் கிலோவொன்றுக்கான பண்ட வரி 200 ரூபாவாகவும், திராட்சை, ஆப்பிள், கிலோவொன்றுக்கான 300 ரூபாவாகவும், தோடம்பழம், பேரீச்சம்பழம் கிலோவொன்றுக்கான வரி 200 ரூபாவாகவும் விதிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் 367 பொருட்களுக்கு இறுக்குமதிக் கட்டுப்பாட்டினை நிதியமைச்சு விதித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. இவற்றினை அத்தியவசியமற்ற பொருட்கள் எனவும் நிதிமைச்சு அறிவித்தது.

இந்த நிலையில், இறக்குமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பொருட்களிலிருந்த ஈச்சம்பழத்தை விடுவிக்குமாறு, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு பிரதமர் இணங்கியதாகவும் சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையிலேயே இறக்குமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள ஈச்சம்பழம் கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவை பண்ட வரியாக விதித்து நிதியமைச்சு அறிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான கட்டுரை: பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு; அறிவுபூர்மான தீர்மானல்ல என விமர்சனம்: தொழில்துறைகளும் பாதிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்