
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்குச் சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே இன்று (04) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் நீதியரசர்கள் குழாம், இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்தது.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க மற்றும் இலங்கை மின்சார தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜயலால் பெரேரா ஆகியோர், மேற்படி 03 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர்.



