‘எவன் கார்ட்’ தலைவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை; சட்டத்தரணி தெரிவிப்பு

🕔 December 17, 2015
Nissanka senadhipathi - 098வன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தகவலை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் அவருடைய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதனால் நேற்று புதன்கிழமை நடைபெறவிருந்த விசாரணைகளில் தமது கட்சிக்காரரால் பங்கேற்க முடியவில்லை என்றும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிரில், நேற்று முன்னிலையாகுமாறு நிசங்க சேனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு நிசங்க சேனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக,  ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்