ஆமைகளுடன் நபர் கைது

🕔 December 16, 2015

Turtle - 098
– க. கிஷாந்தன் –

மைகளை தன்வசம் வைத்திருந்த ஹட்டன், கொட்டகலையைச்  சேர்ந்த 58 வயதுடைய  நபரொருவரை பதுளை பொலிஸார் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.

பதுளை ஹிந்தகொட பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றிலிருந்து இந்த ஆமைகளை பிடித்துள்ள அந்நபர், அவற்றை உரப் பையினுள் வைத்து மறைத்துக் கொண்டு செல்லும் வேளையிலேயே கைதாகியுள்ளார்.

குறித்த உரப் பையினுள் நான்கு ஆமைகள் இருந்துள்ளன.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக மேற்படி ஆமைகளை சந்தேக நபர் பிடித்துச் சென்றதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Turtle - 095

Comments

புதிது பேஸ்புக் பக்கம்