பாலமுனை ஜமால்தீன், கலாபூஷணம் விருது பெற்றார்

🕔 December 15, 2015

Kalabhushan - 013
– மப்றூக் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, பாலமுனை ஹுசைனியா நகரைச் சேர்ந்த ஏ.எல். ஜமால்தீன் 2015 ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் அரச விருதினைப் பெற்றுள்ளார்.

மகரகம இளைஞர் சேவை மன்றக் காரியாலய மண்டபத்தில், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ‘கலாபூஷணம் அரச விருது விழா’ நிகழ்வில் வைத்து, இவருக்கான விருது வழங்கப்பட்டது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடம் தோறும் நடத்தப்படும், கலாபூஷணம் விருது வழங்கல் விழாவின், 31 ஆவது நிகழ்வு, இன்று செவ்வாய்கிழமை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெணான்டோ தலைமையில் நடைபெற்றது.

அந்த வகையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து மேற்படி ஏ.எல். ஜமால்தீன் ஓவியம், பாடல் இயற்றிப் பாடுதல் உள்ளிட்ட துறைகளில் நீண்ட காலமாக தடம்பதித்து வருகின்றமையை கௌரவிக்கும் வகையில், கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் எனும் கிராமத்தில் பிறந்த ஏ.எல். ஜமால்தீன் தற்போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை, ஹுசைனியா நகர் கிராமத்தில் வசித்து வருகின்றார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் ஒரு சாதாரண விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவியம் வரைவதைத் தற்போது தொழிலாகச் செய்து வரும் ஏ.எம். ஜனால்தீன், இசைக் கருவிகள் வாசிப்பதிலும் விற்பன்னராவார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக கலாசாரப் பிரிவு உத்தியோகத்தர்களும், இவரின் திறமையினை இனம் கண்டு, கலாபூஷணம் விருதுக்காக ஜமால்தீனின் பெயரைப் பரிந்துரை செய்திருந்தனர்.
Kalabhushan - 015Kalabhushan - 014

Comments

புதிது பேஸ்புக் பக்கம்