பெண்ணை பகிடி செய்தவர்களுக்கு விளக்கமறியல்
– எப். முபாரக் –
திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் வீதியால் சென்ற இளம் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளால் பேசி, பகிடிவதை செய்த இருவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தீவு, பாளையூற்று பகுதியைச் சேர்ந்த எஸ்.ராஜ்குமார் (வயது 31), கே.பி. சமந்தா (வயது23) ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் வீதியால் சென்ற வேளையில், மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழி மறித்து தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், பகிடிவதை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்து திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே உத்தரவிட்டார்.