அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்; பிரதமர் தெரிவிப்பு

🕔 December 14, 2015
Ranil - 096ரச ஊழியர்களின் அடிப்பபடைச் சம்பளம் அடுத்த வருடம் முதல் 02 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்டும் என்று,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அண்மையில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு 10, 000 ரூபாவினால் உயர்த்தப்பட்டது. இந்த கொடுப்பனவிலிருந்தே, மேற்படி இரண்டாயிரம் ரூபா – அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் மேலும் தெரிவிக்கையில்;

“அரச ஊழியர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்படாது. நிதி ஒதுக்கத்துடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டமொன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும். அதனுடன் 2000 ரூபா அடிப்படை வேதனமாக சேர்க்கப்படும்.

புகைப் பரிசோதனை சான்றிதழ் கட்டணம் 5000 ரூபாவிலிருந்து தற்காலிக அடிப்படையில் ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.

வாகன குத்தகை மதிப்பீடு கட்டணம் கார்களுக்கு 5000 ரூபாவும், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவும் அறவீடு செய்யப்படும்.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் 2500 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது.

இந்த சம்பள உயர்வு எதிர்வரும் மே மாதம் முதல் கட்டாயம் அமுல்படுத்தப்பட உள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்