கைக்குண்டு விவகாரம்: அச்சுறுத்திப் பெறும் வாக்குமூலங்கள் அடிப்படையிலான முடிவை ஏற்கப் போவதில்லை: கர்தினால் மல்கம் ரஞ்சித்

🕔 January 24, 2022

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்களை அச்சுறுத்தி பொலிஸார் பெறும் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்ட முடிவினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

“ஓல் செயின்ட்ஸ் தேவாலய கைக்குண்டு வழக்கில் எடுக்கப்பட்ட முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இது மக்களை அச்சுறுத்தி சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை” என்று கர்தினால் ரஞ்சித் கூறியுள்ளார்.

கைக்குண்டு வழக்கில் உண்மை வெளிவரும் வரை திருச்சபை போராட்டம் நடத்தும் எனக் கூறியுள்ள கர்தினால்; சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முனி என்பவருக்கு நீதி கிடைக்கவும் நாங்கள் பாடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கைக்குள் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததால், அதன் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய, சர்வதேச உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் தேவாலயம் உள்ளதாகவும் கார்டினல் கூறினார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையைக் கண்டறியும் முயற்சியில் வெளிநாட்டு கத்தோலிக்க ஆயர்களின் ஆதரவை நான் பெறுவேன். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளின் நாடுகளின் தூதரக அதிகாரிகளின் ஆதரவையும் நான் கோருவேன்” என்றும் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்