அரசியலில் பெண்களில் பிரதிதிநித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க விரைவில் நடவடிக்கை; பிரதமர் ரணில்

🕔 December 12, 2015

Ranil - 0998ர­சி­யலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை 25 வீத­மாக அதி­க­ரிக்கும் சட்­ட­ மூலம் எதிர்­வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று வெள்­ளிக்­கி­ழமை சபையில் தெரி­வித்தார்.

இவ்­வி­டயம் தொடர்பில் முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பினர் ரோஸி சேனா­நா­யக்க பாரிய பங்ளிப்பை செய்ததாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றியபோதே, பிரதமர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

பிர­தமர் சபையில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

“இலங்கை அர­சி­யலில் பெண்­க­ளுக்கு அதிக பிர­தி­நி­தித்­து­வத்தை வழங்­கு­வ­தற்­கான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுத்­துள்ளோம். இது தொடர்­பான தீர்­மானம் கடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­டது.

அர­சியல் பின்­னணி கொண்ட குடும்­பங்­களை சேர்ந்­த­வர்­களே ஆசி­யாவில் அர­சி­ய­லுக்குள் நுழைந்துள்­ளனர். இதனை மீறி பெண்கள் அர­சி­ய­லுக்கு வரு­வது எமது நாட்டில் மிகக் குறைவானதாகவே காணப்­பட்­டது. பொரு­ளா­தார மற்றும் அர­சியல் கார­ணி­களே இதற்குத் தடையாக காணப்­பட்­டன.

இந்த வரை­ய­றையை தாண்டி ஆசிய பெண்கள் அர­சி­யலில் முன்­னி­லைக்கு வந்­துள்­ளனர். உலகின் முத­லா­வது பெண் பிர­தமர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட முதல் பெண் ஜனா­தி­பதி ஆகியோர் எமது நாட்டில் தோன்­றி­னார்கள்.

அயல் நாடான இந்­தி­யாவில் பெண் பிர­தமர் உரு­வெ­டுத்தார். ஜனா­தி­பதி உரு­வா­கினார். பங்களாதேஷில் 2 பெண் பிர­த­மர்கள் உரு­வா­னார்கள்.

ஆனால் எமது நாட்டில் சமூக சூழல் மற்றும் தேர்தல் முறைமை கார­ண­மாக பெண்கள் அர­சி­யலில் முன்­னோக்கி வர முடி­யா­துள்­ளது. இவ்­வி­டயம் தொடர்பில் ஐ.தே.கட்சி பல காலங்­க­ளாக ஆழ­மாக ஆராய்ந்­தது. முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஸி சேனா­நா­யக்க இவ்­வி­டயம் தொடர்பில் பாரிய பங்­க­ளிப்பை வழங்­கினார்.

பல்­வேறு பெண்கள் அமைப்­புக்­க­ளுடன் செயற்­பாட்­டா­ளர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை நடத்­தினார். பெண்­களின் அர­சியல் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிக்க நட­வ­டிக்­கை மேற் ­கொண்டார்.

பாரா­ளு­மன்ற பெண் உறுப்­பி­னர்­களின் அமைப்பின் மூலம் சுதர்­ஷனி பெர்­ணாந்­து­புள்ளே எம்.பி.யும் பங்­க­ளிப்பை வழங்­கினார். 2013 ஆகஸ்ட் 7 ஆம் திகதி பிரே­ர­ணை­யொன்றை உள்­ளூ­ராட்சி தேர்தல் திருத்­தத்தில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிக்க வேண்­டு­மென்ற நோக்கில் ரோஸி சேனா­நா­யக்க எம்.பி. முன்­வைத்தார்.

ஜன­வரி புரட்­சிக்கு ஆத­ரவு வழங்­கி­ய­வர்­களும் இதனை வலி­யு­றுத்­து­கின்­றனர். ஜனா­தி­பதித் தேர்தலில் இதை நிறை­வேற்ற உறு­தி­மொழி வழங்­கினோம். இது தொடர்­பாக எமது புதிய ஆட்சி சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி., தமிழ் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. பாராளுமன்றத்திலும் உள்ளூ ராட்சி சபைகளிலும் பெண்களின் பிரதி நிதித்துவத்தை 25 வீதம் அதிகரிக்க நடவ டிக்கை எடுக்கப்படும்.

தற்போது இந்த சவாலை வெற்றிபெற எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது” என்றார்.

Comments