பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டு; சிறுவர் ஒருவரின் ஊடாக வைக்கப்பட்டது: பொலிஸ் பேச்சாளர் தகவல்

🕔 January 12, 2022

பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் ( All Saints’ Church) இருந்து நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டு, 13 வயது சிறுவர் ஒருவரின் ஊடாக, அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மன்னாரில் தயாரிக்கப்பட்டதெனத் தெரியவந்துள்ள இந்தக் கைக்குண்டு, வெப்பம் அடையும் பட்சத்தில் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் பிரதான சந்தேக நபர் எனத் தெரியவந்திருந்தது.

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments