தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர், உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறும்; பிரதமர் அறிவிப்பு

🕔 December 11, 2015

Ranil - 0988ள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னர்  நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில்இன்று ஆரம்பமான வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

உள்ளூரட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்து எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழ், சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சிமன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து ஆராயும் சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் ரா.சம்பந்தன், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹந்த தேசப்பிரிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கொள்ளவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்