பால்மாவுக்கான விலை மீண்டும் எகிறுகிறது: ஒரு கிலோவுக்கு 02 மாதத்தில் 400 ரூபா அதிகரிப்பு

🕔 December 30, 2021

பால்மாவுக்கான விலைகள் இன்று நள்ளிரவு தொடக்கம் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க ஒரு கிலோ பால்மாவுக்கு 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவுக்கான விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாகஅந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோ பால்மா 1345 ரூபாவுக்கும், 400 கிராம் பால்மா 540 ரூபாவுக்கும் விற்கப்படும்.

கடந்த ஒக்டோபர் மாதம் ஒரு கிலோ பால்மாவுக்கு 250 ரூபாவும், 400 கிராம் பால்மாவுக்கு 100 ரூபாவும் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

இருந்தபோதிலும் சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்