எடை குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

🕔 December 29, 2021

தெற்காசியாவில் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் இருக்கும் நாடுகள் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளதாக உல சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

0 5 வயதில் சராசரியான உயரம் மற்றும் எடை இல்லாத குழந்தைகளை – ‘எடை குறைந்த குழந்தைகள்’ என, உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்துகிறது.

ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், இலங்கை மற்றும் இந்தியாவில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த நாடுகளை தவிர பப்புவா நியூகினியா, மாலைதீவு, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்று நோயின் பாதிப்பு காரணமாக இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலைமை ஆபத்துக்கு உள்ளாகும் நாடுகள் வரிசையில் இலங்கையும் இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் உலகில் உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றென உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்