கல்முனை மாநகர சபை உறுப்பினராக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் றஜப்தீன் பதவியேற்பு

🕔 December 27, 2021

– பாறுக் ஷிஹான் –

ல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஜ.எம். றஜப்தீன் இன்று திங்கட்கிழமை (27) தனது சத்தியப்பிரமாண பத்திரத்தை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப்பிடம்  கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், ரி. ராஜரட்ணம், சபைச் செயலாளர் ஏ.எம். ஆரிப், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஜீ.எம். நதீர், அக்கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.ஐ.எம். மஸீன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கல்முனை மாநகர சபையின் உறுப்பினராக பதவி வகித்து வந்த சட்டத்தரணி என்.ஏ.எம். அஸாம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, மருதமுனையை சேர்ந்த எம்.ஐ.எம். றஜப்தீன் அக்கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்