தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

🕔 December 10, 2015
Protest - SEUSL - 098
தெ
ன்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட  மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்குமாறு, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் போதும்,  அவர்கள் தொடர்ச்சியாக இருப்பதில்லை என, இதன்போது மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு தாம் ஏற்கனவே அறிவித்திருந்த போதும், அதற்கான நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்றும், அதன் காரணமாகவே இந்த ஆர்ப்பாட்டத்தை தாம் ஏற்பாடு செய்ததாகவும் மாணவர்கள் கூறினர்.

எனவே, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் காணப்படும் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக தீர்க்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர். Protest - SEUSL - 097Protest - SEUSL - 096

Comments

புதிது பேஸ்புக் பக்கம்