கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு: மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆலையடிவேம்பு தர்ஷிகா, 13 பதக்கங்களைப் பெற்று சாதனை

🕔 December 19, 2021

– வி. சுகிர்தகுமார் –

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது, அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவர் 13 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் மருத்து பட்டப்படிப்புக்கான (MBBS) இறுதிப் பரீட்சையில், முதல் தரத்தில் (First Class) சித்தி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு தனது பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும் (Topper) தர்ஷிகா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது, சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 விருதுகளுக்கான பதக்கங்கள் இவருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவர் ஓய்வு பெற்ற அதிபர் தணிகாசலம் அவர்களின் புதல்வியாவார்.

கொழும்பு பல்கலைகக்கழக பட்டமளிப்பு விழா, 17ஆம் திகதி தொடக்கம் இன்று 19ஆம் திகதி வரை கொழும்ப பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்