நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக மு.கா. செயல்பட நேரிடும்; ஹக்கீம்

🕔 December 8, 2015

Hakeem - 01த்தேச தேர்தல் சீர்திருத்தம் சரியான முறையில் அமையாவிட்டால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயல்பட நேரிடும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

மேலும், தற்பொழுது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமயானது, முழு நாட்டையும் ஒன்றாக கவனத்தில் கொள்வதால், சிறுபான்மையினருக்கு பெரிதும் நன்மை உடையதாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நோர்வேயைச் சேர்ந்த அரசியலமைப்பு மற்றும் உலக தேர்தல் சீர்திருத்த நிபுணர் ஹேரே வலன் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீமை இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சந்தித்து உத்தேச தேர்தல் சீர்த்திருத்தம் சம்பந்தமாக கலந்துரையாடிய போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்ட விடங்களைத் தெரிவித்தார்.

நிபுணர் ஹேரே வலண் ஸ்கொட்லாந்து, ஜேர்மனி மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றின் தேர்தல் முறையைமை பற்றி இச்சந்திப்பின்போது சுருக்கமாக விளக்கினார்.

இக்கலந்துரையாடலில் ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன், பிரதியமைச்சர்களான பைசால் காசீம், எச்.எம்.எம். ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன, அலிசாஹிர் மௌலானா, எம்.ஐ.எம். மன்சூர், திலகராஜ், டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாபா பாறூக் மற்றும் அரசியல் நிபுணர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.Hakeem - 03

Comments