நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களிடம் உதவி கோரினார் பிரதமர் மஹிந்த

🕔 December 1, 2021

லங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாக, இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் நேற்று (02) இரவு கொழும்பு ஷங்கிரி லா ஹோட்டலில் நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பும் இடம்பெற்றது.

இஸ்லாமிய நாடுகளுடனான இருதரப்பு உறவைத் தொடர்ந்து பேணுதல் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் ஊடாக இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களிப்பு செய்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இஸ்லாமிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் 15 தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஓமான், பலஸ்தீன், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, கடார், துருக்கி, ஈரான், லிபியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் மாலைதீவு, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த நாடுகளின் இலங்கை உயர் ஸ்தானிகர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்