மாட்டு வண்டியில் பயணித்தவர், கனரக வாகனம் மோதி பலி; சம்மாந்துறையில் பரிதாபம்
– எம்.வை. அமீர், யூ.எல்.எம். றியாஸ் –
மாட்டு வண்டியில் பயணித்த ஒருவர் சம்மாந்துறை – வங்களாவடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பலியானார்.
கனரக வாகனமொன்று, மாட்டு வண்டியின் பின்னால் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்மாந்துறையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆதம்பாவா அப்துல் குத்தூஸ் (72வயது) என்பவரே விபத்தில் மரணமடைந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாட்டு வண்டியில் உரப்பைகளை ஏற்றிக் கொண்டு, மேற்படி நபர் வயலுக்குச் செல்லும் வழியிலேயே இந்தச் விபத்து இடம்பெற்றது.
அம்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்த மேற்படி கனரக வாகனம், அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த மாட்டு வண்டியுடன் மோதியமை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக தெரியவருகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிசாரின் விசாரணைக்கு சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா, களத்தில் நின்று உதவினார்.