உயர்தரம் கற்பதற்கு சுகாதாரப் பாடத்தில் சித்தியடைவதைக் கட்டாயமாக்க நடவடிக்கை; அமைச்சர் ராஜித

வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 2265 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.
மேலும், எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 20 மாணவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறினார்.
கல்வித்துறையில் சுகாதார கல்வியை கட்டாயப் பாடமாக இணைத்து கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இங்கு தெரிவித்தார்.