மஹிந்தவுக்கான பாதுகாப்பு அகற்றப்படவில்லை; செய்தி பொய் என்கிறார் ரொஹான் வெலிவிட்ட

🕔 December 6, 2015

Rohan welivitta - 0987முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 ராணுவ வீரர்ககள், மற்றும் பொலிார் அகற்றப்பட்டதாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவலில் உண்மையில்லை என்று, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றிலேயே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மேலதிக ராணுவத்தினரும், அதிகாரிகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் ரொஹான் வெலிவிட்ட அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம்,  புனர்வாழ்வு வழங்கப்படாத முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலரை விடுவித்துள்ளமையினால், மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மேலும் 102 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 80 பேர் பாதுகாப்பு பணிகளுக்காகவும், 22 பேர் நிர்வாக கடமைகளுக்காகவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும், வெலிவிட்டவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில்; ஜனாதிபதி உட்பட விசேட பிரமுகர்களுக்கான ராணுவ பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிணங்க, பொலிஸாரின் பாதுகாப்பு மாத்திரமே விசேட பிரமுகர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித விளக்கியிருந்தார்.

எனவே, எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்