தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ கிடைத்துள்ளதாக ராஜித தெரிவிப்பு; முக்கிய பிரமுகர்களும் காணப்படுகின்றனராம்

🕔 December 6, 2015

Rajitha - 011பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சீ சீ டிவி வீடியோ பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினர் வசமமுள்ள இந்த வீடியோக்கள், விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோக்களில், சில முக்கிய பிரமுகர்களும் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சுட்டிக்காட்டியுள்ளார்.

வசீம் தாஜூதீனின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று, அது திட்டமிட்ட கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டிருந்தது.

விஷேட மருத்துவ குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், தாஜுதீனின் மரணம், கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்