ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே

🕔 October 28, 2021

சேதனப் பசளையை ஊக்குவிக்கும் திட்டத்தை சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சு செயற்படுத்தாமை தொடர்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று (28) விமர்சனங்களை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்;

“ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் என்ற வகையில் எம்மால் சந்தைப் படுத்த முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு அதிகளவில் பேசியிருக்க வேண்டும். சுகாதார அமைச்சு வெளியில் இறங்க வேண்டும், இது தொடர்பில் கூற வேண்டும். இதன் மூலம் யாருக்கு பிரதிபலன் கிடைக்கின்றது? சுகாதார அமைச்சு இது தொடர்பில் ஒரு நாளாவது பேசினார்களா?

சுற்றாடலுக்கு இதன் மூலம் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் சுற்றாடல் அமைச்சு பேசுகிறதா?

எனவே இதனை சந்தைப்படுத்த முடியவில்லை என்பதையே எம்மால் கூறமுடியும். அதனை சந்தைப்படுத்த முடியாமல் போனமை நிகழ்ந்த பெரிய தவறாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்