கிழக்கு மாகாணத்துக்கு கணிசமான வீடுகளை வழங்குவதாக, கிழக்கு முதலமைச்சரிடம் டேவிட் டாலி உறுதி

🕔 December 5, 2015

CM - Eastern - 08
டக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஐரோப்பிய ஒன்றியம் அமைத்து கொடுக்கவுள்ள 3000 வீடுகளில், கணிசமானவற்றினை கிழக்கு மாகாணத்துக்கு வழங்கவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகரும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதியுமான டேவிட் டாலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரிடம் உறுதியளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகரும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதியுமான டேவிட் டாலி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே, டேவிட் டாலி இந்த உறுதிமொழியினை வழங்கினார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் இம்முறை இலங்கைக்கு ஒதுக்கிய 500 கோடி ரூபாவில், கிழக்கு மாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கா 150 கோடி ரூபாவை வழங்குவதாகவும் அவர் இதன்போது கூறினார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான வேலைத்திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி வழங்கும் என்றும் டேவிட் டாலி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்