அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்வு

🕔 October 8, 2021

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவை சொந்த இடமாகக் கொண்ட மூவர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

ஒலுவில் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஏ.எல்.எம். ஜெமீல், பாலமுனையைச் சேர்ந்த எம்.கே. அஸார் மற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ. ஏ. வாஹிட் ஆகியோரே இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

பிரதம பொலிஸ் பரிசோதகர்களாக கடமையாற்றி வந்த நிலையில் இவர்களுக்கு இந்த பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளன.

உதவி பொலிஸ் அத்தியட்சகராகப் பதவி உயர்வு பெற்றுள்ள ஜெமீல், அக்கரைப்பற்று மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

இவர் தற்போது கல்முனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையிலேயே, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் அஸார்; ஏற்கனவே அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியுள்ளார்.

தற்போது கொழும்பில் கடமையாற்றி வரும் நிலையிலேயே, இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த வாஹிட், மேற்படி இருவருக்கும் முன்னர், கடந்த மாதம் உதவி பொலிஸ் அத்தியட்சகராக தரமுயர்த்தப்பட்டார்.

இவர் பொத்துவில், சவளக்கடை, மூதூர் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த நிலையில், இவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக தரமுயர்த்தப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்