குடியிருப்பில் ஏற்பட்ட தீயினால், பெறுமதியான பொருட்கள் நாசம்

🕔 December 4, 2015

Fire  - bogawantalawa - 098
– க. கிஷாந்தன் –

தீ விபத்து காரணமாக, பொகவந்தலாவ லட்சுமி தோட்டம் மேல்பிரிலுள்ள குடியிருப்பு ஒன்றில் பெறுமதிமிக்க பொருட்கள் நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 09.30 மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குடியிருப்பில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து, திடீரென தீ பரவியமையினால், இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக அறிய முடிகிறது.

இதன்போது, அங்கிருந்த தொலைகாட்சி, உடைகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.Fire  - bogawantalawa - 097

Comments

புதிது பேஸ்புக் பக்கம்