ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல்

🕔 October 1, 2021

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமைய, இவர்கள் கைதுசெய்யப்பபட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களைக் குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காதன் ஊடாகக் கடமை தவறியமை உள்ளிட்ட  தலா 855 குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நாமல் பலல்லே, ஆதித்யா பட்டபெதிகே மற்றும் மொஹமட் இர்சதீன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் ஆயத்தினால் ஆராயப்பட்டபோதே இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான, சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் (Senior deputy Solicitor General) திலீப பீரிஸ், சாட்சியாளர்களாக 1,215 நபர்களைப் பெயரிட்டுள்ளார்.

இதன்படி, வழக்கு விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக நீதிபதிகள் ஆயம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்