வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு, நாளை முடிவுக்கு வருகிறது

🕔 December 3, 2015

GMOA - 321
ரசாங்க வைத்தியர்கள் இன்று புதன்கிழமை ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கை, நாளை 08 மணியுடன் நிறைவுக்கு வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகளுக்கு தீர்வையற்ற  வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான அனுமதிப் பத்திரம் வரவு செலவு திட்டத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மேற்படி அனுமதிப் பத்திரத்தினை மீண்டும் வழங்குமாறு கோரி, அரசாங்க வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையினை ஆரம்பித்தனர்.

தமது கோரிக்கைக்கு உரிய பதிலை வழங்குவதற்காக அரசாங்கத்துக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கும் நோக்கிலே இந்த பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்ததாக, அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆயினும், தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், மீண்டும் தொழிற்சங்க போராட்டம் தொடரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்