மூன்றாவது ‘டோஸ்’ ஆக, பைசர் தடுப்பூசியை வழங்க அனுமதி: சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

🕔 September 29, 2021

நாட்டில் கொவிட் தொற்றுக்கு எதிரான மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசியாக, ஃபைசர் தடுப்பூசியையை செலுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

தடுப்பூசி தொடர்பான தொழில்நுட்பக் குழுவினர் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மூன்றாவது தடுப்பூசி முதலில் பின்வரும் குழுக்களுக்கு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

  • 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
  • சினோஃபார்ம் அல்லது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதல் மற்றும் 02 வது டோஸாக எடுத்துக் கொண்டவர்கள்.
  • 30-60 வயதுக்குட்பட்ட நோயாளிகள்.
  • புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளவர்கள்.
  • சுகாதார பணியாளர்கள்.
  • முன்னணி தொழிலாளர்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்