மஹிந்த: திருமண நிகழ்வுக்கு சென்றதால்தான், நாடாளுமன்றுக்கு வரவில்லையாம்

🕔 December 3, 2015
Mahinda Rajapaksa - 054திருமண நிகழ்வுகளுக்குச் சென்றமையினாலேயே, முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்று, அவரின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று பதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றவேளை, மஹிந்த ராஜபக்ஷ சபைக்குச் சமூகமளிக்கவில்லை.

இந்த நிலையில், வரவுசெலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்புக்காக மஹிந்தவின் பெயர் அழைக்கப்பட்ட போது சபையில் பெரும் கூச்சல் ஏற்பட்டது.

இவ் விடயம் தொடர்பில், மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் மேலும் தெரிவிக்கையில்; “நேற்றைய தினம் இரண்டு திருமண நிகழ்வுகளுக்காக மஹிந்த ராஜபக்ஷ சாட்சி கையொப்பமிடுவதற்கு சென்றிருந்தார். அதன் காரணமாகவே, நாடாளுமன்றத்துக்கு அவர் வருகை தரவில்லை” என்றார்.

இருந்தபோதும், முன்னாள் நிதி அமைச்சர் என்ற ரீதியில் வரவு – செலவு திட்டம் தொடர்பில் உரையாற்றுவதற்கு, மஹிந்த ராஜபக்ஷவுக்கு 05 நிமிடங்கள் கூட வழங்கப்படாதது ஏன் என்பது தொடர்பிலும் ஆராயப்படவேண்டும் என்றும் மஹிந்தவின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

தொடர்பான செய்தி: மஹிந்தவை தேடிய, ஐ.தே.க. எம்பி; நாடாளுமன்றில் சுவாரசியம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்