ரஞ்சன் 12ஆம் திகதி விடுதலை?: சிறைக்கைதிகள் தினத்தில் ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைக்கிறதா?

🕔 September 10, 2021

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இவ் விடயம் தொடர்பில் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்று, இந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

‘இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினம் செப்டெம்பர் 12 ஆகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எங்கள் அன்புமிக்கவரும், பிரபல நடிகரும் மக்கள் சார்பு அரசியல்வாதியுமான ரஞ்ஜன் ராமநாயக்கவை அன்றைய தினம் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வார் என எதிர்பார்க்கின்றேன்’ என, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் திரைத்துறை முன்னணிக் கலைஞர்கள் என, பல தரப்பினரும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நீதித்துறைக்கு அவமதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், ரஞ்சன் ராமநாயக்க – நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்