உண்மைகள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளன: அரசாங்கத்தின் இறக்குமதி ஒழுங்குமுறை குறித்து, அமைச்சர் பந்துல கருந்து

🕔 September 10, 2021

கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய அத்தியாவசியமற்ற பொருட்கள் உள்ளிட்ட 623 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பபட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மறுத்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் இதுதொடர்பில் பேசிய அமைச்சர்; “மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உண்மைகள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.

மேலும், பணம் செலுத்திய பிறகு பொருட்களை இறக்குமதி செய்யலாம் என்றும், இறக்குமதி செய்வதற்கான வரி அதிகரிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.

மேலும் பொருட்களின் விலையில் அதிகரிப்பு இருக்காது என, தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 100 வீத உத்தரவாதத் தொகையை வைப்பிலிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டதோடு, அவ்வாறான 623 பொருட்கள் குறித்தும் அரசாங்கம் பட்டியலிட்டது.

அவற்றில் உள்ளாடைகளுக்கும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்