அதிக விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டால், உடனடியாக அறிவியுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர்

🕔 August 20, 2021

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் கடைகள் குறித்து தமக்கு உடனடியாக அறிவிக்குமாறு பிரததேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார்.

தனி இறைச்சி ஒரு கிலோகிராம் அதிகபட்டசமாக 800 ரூபாவுக்கே விற்பனை செய்ய வேண்டும் என்றும், அந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாதவர்கள் கடைகளை மூடிவிடுமாறும் தவிசாளர் கூறினார்.

ஒரு கிலோ தனி மாட்டிறைச்சியை 800 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யும் கடைகள் தொடர்பில் 0771261936 எனும் தனது தொலைபேசி இலக்கத்துக்கு உடனடியாக அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

மேற்படி பிராந்தியத்தில் அமைந்துள்ள பல மாட்டிறைச்சிக் கடைகளில், 01 கிலோகிராம் தனி இறைச்சி 900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் மொத்தமாக 16 மாட்டிறைச்சிக் கடைகள் அமைந்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்