வாகன அனுமதிப் பத்திரத்துக்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய்; வைத்தியர்களுக்கு வழங்குமாறு ராஜித கோரிக்கை

🕔 December 1, 2015

Rajitha - 011வைத்தியர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரத்துக்குப் பதிலாக, பத்து லட்சம் ரூபாய் கொடுப்பனவினை வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதுவரை காலமும் வைத்தியர்களுக்கு தீர்வையற்ற வகையில் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வகையிலான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வந்த போதிலும், தற்போதைய வரவு – செலவுத் திட்டத்தின் மூலம், அந்த முறைமை நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுகாதார அமைச்சர் ராஜித, மேற்படி கோரிக்கையினை விடுத்தார்.

சுகாதார அமைச்சரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்