கொவிட் பாதிப்பை குறைத்துக் காட்டும் ‘மேஜர் ஜெனரல்’: நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டார் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித

🕔 August 17, 2021

கொவிட் இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்து குறைந்த 400எண்ணிக்கை வெளியிடும் விடயத்துக்கு பின்னால், ராணுவ அதிகாரியொருவர் இருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் ‘மேஜர் ஜெனரல்’ ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த மேஜர் ஜெனரலே, கோவிட் வைரஸால் இறந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கைக்கு மாறாக குறைந்த எண்களை வழங்கியதாக ராஜித குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் மூலம் இறந்த அல்லது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வுக்கு இதுவே காரணம் என்றும் ராஜித சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த, விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உண்மையான புள்ளிவிவரங்களை வழங்கும் போதுான் இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்றும் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Comments