ரவிக்கு எதிராக, மஹிந்த கையொப்பமிடவில்லை; உதய கம்மன்பில

🕔 November 30, 2015
Udaya Gammanpila - 098நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  மஹிந்த ராஜபக்ஷ  கையொப்பமிடவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பிவிதுரு ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அந்தக் கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில இந்த விடயத்தினைக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் முக்கியமான சில காரணங்களுக்கமையவே கையொப்பமிடவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையில், மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டிருந்தார் என, முன்னர் செய்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்