திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை
வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் (17 ஆம் திகதி) நள்ளிரவு தொடக்கம், மீள அறிவிக்கும் வரையில் இந்தத் தடை அமுலில் இருக்கும்.
அத்துடன் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை ஹோட்டல்களிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிற்றுண்டிச்சாலைகளில் ஒரு சந்தர்ப்பத்தில் 50 சதவீதமானோரை விட அதிகமானோர் ஒன்றுகூட முடியாது எனவும் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவல் அதிகரித்துள்ளமையினை அடுத்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.