குண்டு துளைக்காத கார் வேண்டும்; மைத்திரியிடம் மஹிந்த கோரிக்கை
குண்டு துளைக்காத கார் ஒன்றை தனக்கு வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தொலைபேசியினூடாக ஜனாதிபதியிடம், இந்தக் கோரிக்கையினை மஹிந்த முன்வைத்துள்ளார்.
விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டு வருவதால், தனக்கு குண்டு துளைக்காத கார் ஒன்று இருக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ கோரியதாக தெரியவருகிறது.
தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதசந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை விடவும் அதிகளவான பாதுகாப்பும் வாகனங்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.