றிசாட் பதியுதீனை 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவு

🕔 August 10, 2021

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் ​வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (10) ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி றிசாட் பதியுதீனும் அவரின் சகோதரர் றியாஜ் பதியுதீனும் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 78 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் இவர்கள் இருவரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்