மாமாங்கம் கோயில் அறங்காவல்களுக்கு நீதிமன்றில் பிணை: பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகினர்

🕔 August 9, 2021

த நிகழ்வு ஒன்றினை அண்மையில் நடத்தியமை தொடர்பில், மட்டக்களப்பு மாமாங்கம் கோயிலின் ஐந்து அறங்காவலர்கள் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த ஐவவரும் கோயிலின் தலைமைப் பூசாரியும் இன்று தொடக்கம் 14 நாட்களுக்கு கோயில் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாமாங்கம் கோயிலில் அண்மையில் நடைபெற்ற ஆடி அமாவாசை வழிபாடுகளின் போது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரண்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினை அடுத்து, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கோவிலின் அறங்காவலர்கள் மீது அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி சட்ட நடவடிக்கை எடுத்தார்.

இதனையடுத்து கோயிலின் ஐந்து அறங்காவலர்கள் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா 25,000 ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

“அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பிறகு, அனைவரும் பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். தொற்றுநோய் தொடர்பான தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் அனைவருக்கும் சமமானதாகும். ஏனெனில் இது அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்குரியது. உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இவ்வாறான விதி மீறல்களை மேற்கொள்ள வேண்டாம் என்று நாங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று பிரதமரின் இணைப்பாளர் ஜி. காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஒன்றுகூடிய அனைவரையும் பொலிஸார் தற்போது அடையாளம் கண்டு வருவதாகவும், அவர்கள் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும், காசிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்