வாஸ் தொடர்பில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக, வர்த்தகர் சியாமின் தந்தை தெரிவிப்பு

🕔 November 28, 2015

Siyam - father - 09னது மகன் சியாமின் கொலையில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று, தான் தெரிவித்த கருத்தை மீளப்பெறுவதாக சியாமின் தந்தை இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றவாளி இல்லை எனவும், அவர் மேல் முறையீடு செய்தால் இது தொடர்பில் தான் சாட்சியளிக்கத் தயாராக உள்ளதாகவும் நேற்றைய தினம் சியாமின் தந்தை கூறியிருந்தார்.

இந்நிலையிலேயே, அவர் – தான் வெளியிட்ட கருத்தை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளார்.

தீர்ப்பின் பின்னர், தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், அவ்வாறானதொரு நிலையிலேயே வாஸ் குணவர்த்தன தொடர்பில் அவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டதாகவும் சியாமின் தந்தை தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: வாஸ் குற்றவாளியில்லை, சாட்சி சொல்லவும் தயார்; சியாமின் தந்தை தெரிவிப்பு

Comments