முன்னாள் ஜனாதிபதிக்கு தலைவலி ஏற்படுகிறதாம்; ஏனென்று விபரிக்கிறார் சஜித்

🕔 May 31, 2015

Sajith - 02– வி.சுகிர்தகுமார் –

டந்த கால ஆட்சியாளர்கள் – அரசாங்க நிதியினை அகப்பையில் அள்ளி எடுத்து, கரண்டியால் கிள்ளிக் கொடுத்ததாக அமைச்சர் சஜித் பிரேததாஸ தெரிவித்தார் .  மக்களுக்காக ஒதுக்கும் நிதியில் பெருந்தொகையை அன்றைய அரச குடும்பமும் அவர்களை சார்ந்தவர்களும் பிரித்தெடுத்த பின்னர், எஞ்சியவற்றையே மக்களுக்கு வழங்கினார்கள் எனவும் அவர் கூறினார்.

அம்பாறை தயாகமககே ஆடைத்தொழிற்சாலை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற திரியசவிய மற்றும் வீடமைப்பு கடன் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

“மக்களின் பணத்தை மக்களுக்கே பிரித்துக் கொடுத்து, அவர்களை வளப்படுத்தி சக்தியுடையவர்களாக மாற்றுவதே எங்களது நோக்கமாகும். இதுவே, தற்போதய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆகியோர்களின் கொள்கையுமாகும்.

இந்நடவடிக்கையை நாங்கள் முறையாக மேற்கொள்ளும் போது, முன்னாள் ஜனாதிபதி கவலை அடைகின்றார். அவர்கள் பிரித்தெடுத்ததை நாங்கள் ஏழைகளுக்கு வழங்கும் போது அவருக்கு தலைவலி ஏற்படுகின்றது.

கடந்த ஆட்சியில் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை போன்றன மாவட்டங்களில் செயற்பட்டதுடன், மாவட்டம் ரீதியாக – அவர்களின் பிள்ளைகளுடைய நலனுக்காக சொகுசு விடுதிகள் அமைக்கப்பட்டதன் மூலமும் – அரச பணம் வீண் விரயம் செய்யப்பட்டது.

கடந்த ஆட்சியாளர்கள் நாட்டை துண்டாடினார்கள். ஆலயம், பள்ளி என்றெல்லாம் பாராமல் உடைத்தெறிந்தனர். ஆனால் நாம் யாருக்கும் துரோகம் செய்யவில்லை.  நாட்டில் உள்ள 52 லட்சம் வறுமைப்பட்ட மக்களுக்கு  ஜாதி, மத, குலபேதம் மற்றும் கட்சிபேதம் பாராது சேவை செய்வதை நோக்காக கொண்டு செயற்படுகின்றோம்.

இன்றைய தினத்தில் 1900 பயனனாளிகளுக்கு 1900 லட்சம் ரூபாவை வீடமைப்பு கடனுதவியாக வழங்கியுள்ளோம்.  598 பேருக்கு இலகுகடன் – குறைந்த வட்டி மூலம் வாழ்வாதாரக் கடனையும் வழங்கியுள்ளோம். மைத்திரி யுகத்திற்குள் இந்நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்டமையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்” என்றார்.

இந்நிகழ்வில் விவசாய நீர்ப்பாசன அமைச்சர் அனோமா கமகே, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் அமீரலி, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தயாகமகே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.Sajith - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்