நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொவிட் தொற்று உறுதி

🕔 August 6, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண திஸாநாயகவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சிக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிஆராச்சியும் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகவே கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், சில வைத்தியசாலைகள் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்