ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்கள் அதிகரிப்பு; இந்தியா, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும்: அமைச்சர் சன்ன ஜெயசுமன

🕔 August 5, 2021

சிகிச்சையின் ஒரு பகுதியாக ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டொக்டர் சன்ன ஜெயசுமன நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒக்ஸிஜன் அனைத்தும் தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஆகிய நாடுகளிலிருந்து ஒக்ஸிஜன் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்