யானை உள்ளிட்ட சில விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அரசு வழங்கும் இழப்பீடுகளை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

🕔 August 3, 2021

யானை, சிறுத்தை, கரடி, முதலை மற்றும் காட்டு எருது போன்றவற்றினால் ஏற்படும் மனித உயிரிழப்புக்கு 10 லட்சம் ரூபா வரை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதுவரை 05 லட்சம் ரூபாயே இவ்வாறான விலங்குகளினால் ஏற்படும உயிரிழப்புக்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது.

வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.

பாதுகாப்பு வனவிலங்குகளான யானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு எருதுகள் மற்றும் முதலைகள் தாக்குதல் காரணமாக உயிரிழக்கும் மற்றும் முழுமையான அல்லது பகுதியளவில் அங்கவீனமுறும் நபர்களுக்கும், வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதங்களுக்கும் தற்போது செலுத்தப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகைகளை கீழ்க்காணும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

• உயிரிழப்புக்காக இதுவரை செலுத்தப்பட்டு வந்த 05 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை பாலின வேறுபாடோ அல்லது வயது வேறுபாடோ இன்றி 10 லட்ச ரூபாய் வரை அதிகரித்தல்.

• முழுமையான அங்கவீனதுக்கு ஆளாகும் நபரொருவருக்கு இதுவரை செலுத்தப்பட்டு வந்த 05 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை பாலின வேறுபாடோ அல்லது வயது வேறுபாடோ இன்றி 10 லட்சம் ரூபா வரை அதிகரித்தல்.

• பகுதியளவில் அங்கவீனமுறும் அல்லது உடல் காயங்களுக்கு ஆளாகின்றவர்களுக்கு இதுவரை செலுத்தப்பட்டு வந்த 75,000/- ரூபாய்கள் இழப்பீட்டுத் தொகையை 150,000/- ரூபாய்கள் வரை அதிகரித்தல்.

• காட்டு யானைகளின் தாக்குதல்களால் ஏற்படுத்தப்படும் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதங்களுக்காக இதுவரை செலுத்தப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அதிகபட்ச 02 இரண்டு இலட்ச ரூபாய்கள் வரை அதிகரித்தல்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்