புலிகளால் 33 பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட அரந்தலாவ படுகொலை தொடர்பில் விசாரணை ஆரம்பம்: உச்ச நீதிமன்றுக்கு விளக்கமளிப்பு

🕔 August 3, 2021

ரந்தலாவ பிரதேசத்தில் 1987ஆம் ஆண்டு பௌத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில், இன்று உச்ச நீதிமன்றில் சட்ட மா அதிபர் திணைக்களம் விளக்கமளித்தது.

அரந்தலாவ படுகொலையின் போது படுகாயமடைந்த அந்துல்பத்த புத்தசார தேரர், கடந்த வருடம் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

இளையவர்கள் உட்பட 33 பௌத்த பிக்குகள் மற்றும் 04 பொதுமக்கள் புலிகள் இயக்கத்தல் படுகொலை செய்யப்பட்ட அரந்தலாவ சம்பவத்துடன் தொடர்புபட்டு – தற்போது உயிருடன் இருக்கும் எந்தவொரு பயங்கரவாதிக்கும் எதிராக வழக்கு தொடர உத்தரவிடுமாறு அந்த மனுவில் அந்துல்பத்த புத்தசார தேரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு, அப்போதைய சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்