வாஸ் குற்றவாளியில்லை, சாட்சி சொல்லவும் தயார்; சியாமின் தந்தை தெரிவிப்பு
வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றவாளி இல்லை என, கொலை செய்யப்பட்ட சியாமின் தந்தை தெரிவித்துள்ளதாக ‘ஹிரு’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
வாஸ் குணவர்த்தன மேல் முறையீடு செய்தால், தாம் சாட்சி வழங்க தயார் என்று சியாமின் தந்தை தெரிவித்ததாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
பம்பலப்பிட்டி வர்த்தகரான சியாம் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன, அவரின் மகன் உள்ளிட்ட ஆறுபேருக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையிலேயே, வாஸ் குணவர்த்தன குற்றவாளி இல்லை என, சியாமின் தந்தை தெரிவித்ததாக ‘ஹிரு’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.